புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகுமா ‘பைரவா’ டிரைலர்

புத்தாண்டுக்கு ரிலீஸ் ஆகுமா ‘பைரவா’ டிரைலர்

இளையதளபதி விஜய், கீர்த்திசுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘பைரவா’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து வரும் பொங்கல் தினத்தில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் டிரைலர் பணி முடிந்துவிட்டதாகவும், சென்சாருக்கு செல்ல தயாராக இருப்பதாகவும், விரைவில் இந்த படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் இயக்குனர் பரதன் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது

ஆங்கில புத்தாண்டுக்கு இன்னும் மூன்று தினங்களே உள்ள நிலையில் இந்த புத்தாண்டு தினத்தில் ‘பைரவா’ டிரைலரை ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிர முயற்சி செய்து வருவதாக படக்க்ழுவினர் தரப்பில் இருந்து செய்தி வெளியாகியுள்ளது.

விஜய், கீர்த்திசுரேஷ், ஜெகபதிபாபு, சதீஷ், அபர்ணா விநோத், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பைரவா’ படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். பரதன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை பெரும் பொருட்செலவில் விஜயா புரடொக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Leave a Reply