பைரவரை வழிபடும் சூரிய ஒளிக்கதிர்!

EPF_2295965fராமநாதபுரம்: ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயிலில் மாலை 4:30 மணிக்கு மேல், காலபைரவர் சிலை மீது சூரிய ஒளி விழும் நிகழ்வை பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். ராமநாதபுரம் மீனாட்சி சொக்கநாதர் கோயில் பைரவர் சன்னதியில் 2 அடி உயர காலபைரவர் சிலை உள்ளது. மாலை 4:30 மணிக்கு மேல் சூரியஒளி, பைரவர் சிலை மீது விழுகிறது.

மேற்கில் இருந்து கிழக்கு நோக்கி முதலில் பாதத்தில் புள்ளி வடிவில் விழும் சூரிய ஒளி, படிப்படியாக பெரிதாகி வட்ட வடிவில் சிலையை தழுவுகிறது; பின், முகம் வரை சென்று பிரகாசமாகி மறைந்து விடுகிறது. இந்த அரிய காட்சியை நீண்ட நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

கோயில் குருக்கள் மனோகரன் கூறியதாவது: ஏப்ரல் முதல் வாரத்தில் காலையில் கிழக்கில் இருந்து மேற்கு முகமாக விழும் சூரிய ஒளி, மூலவர் சன்னதியில் சொக்கநாதர் சுவாமியின் நெற்றியில் விழும். இப்போது, மற்றொரு அதிசயமாக பிப்., 1 முதல் தொடர்ந்து மாலையில் சூரிய ஒளிக்கதிர் பைரவரின் பாதத்தில் இருந்து மேல் நோக்கி நகர்ந்து தலைக்கு பின்புறம் மறைகிறது. இந்த நேரத்தில் பைரவருக்கு சிறப்பு பூஜை நடக்கிறது, என்றார்.

Leave a Reply