தமிழக அரசின் சலுகையை இழந்த பாலா மற்றும் விஷால்

தமிழக அரசின் சலுகையை இழந்த பாலா மற்றும் விஷால்

kathakali_31122015_mதமிழில் பெயர் வைத்த மற்றும் ‘யூ’ சர்டிபிகேட் பெற்ற படங்களுக்கு தமிழக அரசு 30% வரிவிலக்கு அளித்து வருகிறது. இந்நிலையில் பாலா இயக்கியுள்ள ‘தாரை தப்பட்டை’ மற்றும் பாண்டியராஜ் இயக்கிய ‘கதகளி’ ஆகிய இரண்டு படங்களும் ‘யூ’ சர்டிபிகேட்டை பெறவில்லை என்பதால் இந்த இரண்டு படங்களும் தமிழக அரசின் வரிவிலக்கு சலுகையை இழந்துள்ளது.

பாலாவின் ‘தாரை தப்பட்டை’ திரைப்படம் நேற்று சென்சார் செய்யப்பட்டது. இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்தில் அதிகளவு வன்முறை காட்சிகள் இருப்பதாகவும் தாங்கள் கூறும் சில காட்சிகளை கட் செய்தால் ‘யூ’ சர்டிபிகேட் வழங்குவதாக தெரிவித்தனர். ஆனால் பாலா இதற்கு உடன்படாததால் இந்த படத்திற்கு ‘ஏ’ சர்டிபிகேட் கிடைத்துள்ளது.

இதேபோல் விஷால் நடிப்பில் பாண்டியராஜ் இயக்கியுள்ள ‘கதகளி’ திரைப்படமும் நேற்று சென்சார் செய்யப்பட்டு ‘யூஏ’ சர்டிபிகேட் பெற்றுள்ளது.

இந்த இரண்டு படங்களும் பொங்கல் தினத்தில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply