ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

ஜோதிகா-ஜி.வி.பிரகாஷ் படப்பிடிப்பு இன்று தொடக்கம்

ஜி.வி.பிரகாஷ் நாயகனாகவும், நடிகை ஜோதிகா முக்கிய வேடத்திலும் நடிக்கும் படம் ஒன்றை பிரபல இயக்குனர் பாலா இயக்கவுள்ளார் என்ற செய்தி கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளிவந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கவுள்ளது.

இந்த படத்திற்கு ‘நாச்சியார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. டைட்டில் கேரக்டரில் ஜோதிகா நடிப்பதோடு, கதையின் நாயகியாகவும் நடிப்பதாகவும், இந்த படத்தின் முழு கதையும் அவரது கேரக்டரை சுற்றியே உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இசையமைப்பாளரான ஜி.வி.பிரகாஷ் தான் நடிக்கும் படங்களுக்கு பெரும்பாலும் அவரே இசையமைப்பார். ஆனால் இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கவுள்ளார். பாலாவின் பி ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கின்றது.

Leave a Reply