பழம்பெரும் கர்நாடக இசை மேதை பாலமுரளிகிருஷ்னா காலமானார்.

பழம்பெரும் கர்நாடக இசை மேதை பாலமுரளிகிருஷ்னா காலமானார்.

balamuraliபழம்பெரும் கர்நாடக இசை மேதை பாலமுரளி கிருஷ்ணா உடல்நலக் குறைவு காரணமாக நேற்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 86. அன்னாரது மறைவிற்கு திரையுலகினர், இசை மேதைகள், அரசியல்வாதிகள் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் சங்கரகுப்தம் என்ற ஊரில் பிறந்த பாலமுரளிகிருஷ்ணா 6 வயதில் இருந்து சங்கீதம் பயின்றவர். உலகம் முழுவதிலும் சுமார் 25000 கச்சேரிகளை நடத்திய பாலமுரளிகிருஷ்ணா 400க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். இவற்றில் திரைப்பட பாடல்களும் அடங்கும்

சிவாஜி கணேசன் நடித்த ‘திருவிளையாடல்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒருநாள் போதுமா’, சிவகுமார் நடித்த ‘கவிக்குயில்’ படத்தில் இடம்பெற்ற ‘சின்னக் கண்ணன் அழைக்கிறான்’ ஆகிய பாடல்கள் காலத்தால் அழியாத காவியங்களாக இன்றும் நிலைத்து நிற்கின்றன. மேலும் பக்த பிரகலாதா என்ற திரைப்படத்தில் நாரதர் வேடத்திலும் அவர் நடித்துள்ளார்.

மத்திய அரசின் மிக உயர்ந்த விருதுகளான பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் மற்றும் சிறந்த பாடகருக்கான தேசிய விருது, சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருது ஆகியவற்றையும் பெற்றுள்ளார். மேலும் பிரான்ஸ் நாட்டின் செவாலியே விருது, கலாசிகாமணி, வாழ்நாள் சாதனையாளர் விருது என ஏராளமான விருதுகளைப் பெற்ற பாலமுரளிகிருஷ்ணாவின் மறைவு இசையுலகையே ஆழ்ந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply