காலை உணவை தவிர்க்க வேண்டாம் வெறும் வயிற்றில் டீ, காஃபி குடிக்க வேண்டாம். ஒரே தடவை அதிகம் உண்ணுவதை தவிர்த்து, பல தடவையாக உணவை பிரித்துக் கொள்ளவும். இனிப்பு அமிலத்தை தூண்டும். அதேபோல், உப்பு, எண்ணெய், ஊறுகாய், தயிர் வறுத்த பொரித்த உணவுகள், புளி, காரம் இவற்றை குறைக்கவும். பித்தத்தை போக்கும் உணவுகள் நல்லது.
பச்சைக்காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வதன் மூலம் வயிற்றுப் புண்கள் குணமடையும் என்றும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிக அமிலம் சுரக்கும் கோளாறு உள்ளவர்களுக்கு இளநீர் நல்லது. இளநீருடன் உள்ள வழுக்கை தேங்காயும் சேர்த்து சாப்பிடலாம் என்கின்றனர் மருத்துவர்கள்.
உலர்ந்த, பெரிய கருப்பு திராட்சையுடன், சிறிய கடுக்காயை சேர்த்து நசுக்கவும். சிறு உண்டையாக உருட்டி ஒரு நாளைக்கு ஒன்று சாப்பிடவும். தனியாப்பொடி, சீரகப்பொடி, சர்க்கரை – இவைகளை ஒரு தேக்கரண்டி அளவில் எடுத்துக் கொண்டு கலக்கவும். இந்த கலவையில் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு கப் சுடு நீரில் போட்டு, தினம் மூன்று வேளை குடிக்கவும்.