மேலாடை அணியாத பெண்கள் சிலை எங்கள் கலாச்சாரம். பாலித்தீவு மக்கள்

மேலாடை அணியாத பெண்கள் சிலை எங்கள் கலாச்சாரம். பாலித்தீவு மக்கள்

சவுதி அரேபிய மன்னர் தற்போது இந்தோனேஷியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இன்று அவர் பாலித்தீவு பகுதிக்கு வரவுள்ளதால் அங்குள்ள இந்து கோவில்களில் மேலாடை இல்லாமல் இருக்கும் பெண்களின் சிலைகளை துணி போட்டு மறைக்க இந்தோனேஷிய அரசு உத்தரவிட்டது.

ஆனால் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலித்தீவு மக்கள் ‘மேலாடை அணியாத பெண்கள் சிலை என்பது எங்களுடைய கலாச்சாரத்தில் ஒன்று என்றும் அதை சவுதி அரேபிய மன்னருக்காக மூடி மறைக்க முடியாது’ என்று கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். தினமும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வருவதாகவும், அவர்களை ஏமாற்றும் வகையில் அரைநிர்வாண் பெண் சிலைகளை துணியால் மறைக்க முடியாது என்றும் அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

முன்னதாக சவுதிஅரேபிய மன்னர் இந்தோனேஷியாவின் ஜகர்தா அரண்மனையை பார்வையிட்டார். மன்னரின் வருகையை முன்னிட்டு அங்கிருந்த அரை நிர்வாண பெண் சிலைகள் துணியால் மூடப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply