உலகம் சுற்றும் பலூன்காரர் பயணம் இன்று ஆரம்பம்

உலகம் சுற்றும் பலூன்காரர் பயணம் இன்று ஆரம்பம்

baloonபலூனில் பறந்து உலகம் முழுவதும் சுற்றும் முயற்சியில் ஈடுபடும் ரஷ்ய வீரரின் சாதனைப் பயணம் இன்று ஆஸ்திரேலியா நாட்டில் இருந்து தொடங்கியது. அவருக்கு அவருடைய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

ரஷ்ய நாட்டை சேந்த 64 வயதாகும் கோனியுகோவ் என்பவர் ஏற்கனவே எவரெஸ்ட் சிகரத்தில் ஏறுதல், வட மற்றும் தென் துருவங்களுக்கு நடைப்பயணம் மேற்கொள்ளுதல் போன்ற பல்வேறு சாதனைகளைச் செய்துள்ளார்.

தற்போது மேற்கு ஆஸ்திரேலியாவின் நார்தம் என்ற பகுதியிலிருந்து ஹீலியம் நிரப்பப்பட்ட பலூன் மூலம் உலகை வலம் வர தனது பயணத்தை இன்று தொடங்கியுள்ளார். கடந்த 2002 ஆம் ஆண்டு இதே இடத்தில் தொடங்கிய பலூன் பயணத்தில் ஈடுபட்ட அமெரிக்க வீரர் ஸ்டீவ் ஃபோஸெட், 13.5 நாட்களில் உலகைச் சுற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தச் சாதனையை முறியடிக்க கோனியுகோவ் முடிவெடுத்துள்ளதாகவும் 13 நாட்களில் தனது பயணத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. சற்று முன்னர் பலூனில் பயணத்தைத் தொடங்கிய கோனியுகோவை அவரது மனைவி, விளையாட்டு வீரர்கள் உள்பட பலர் இன்முகத்துடன் வழியனுப்பி வைத்தனர்.

Balloon flying world began by russian player today

Leave a Reply