80 மணிநேர உழைப்பில் பலூனில் தாஜ்மஹால் செய்த அமெரிக்க தம்பதி.

80 மணிநேர உழைப்பில் பலூனில் தாஜ்மஹால் செய்த அமெரிக்க தம்பதி.
balloon tajmahal
பலூனில் பொம்மைகள் செய்து விற்பனை செய்துவரும் அமெரிக்க தம்பதிகள் 80மணி நேரம் கடுமையாக முயற்சி செய்து பலூனில் தாஜ்மஹாலை வடிவமைத்துள்ளனர். இந்த பலூன் பொமைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

அமெரிக்காவின் உட்டா மாநிலத்தைச் சேர்ந்த ஜெரெமி டெல்ஃபோர்ட் என்னும் பலூன் கலைஞர், பலூன்கள் மூலம் விதவிதமாக பொம்மைகள் செய்து விற்பனை செய்து வருகிறார். சிறுவர்கள் விளையாடும் பொம்மைகள் முதல் உலக அதிசயங்கள் வரை இவர் வடிவமைத்த பொம்மைகள் அப்பகுதி மக்களால் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் 3500 பலூன்களைக் கொண்டு 17 அடி உயரமும், 25 அடி அகலமும் கொண்ட தாஜ்மஹாலை 80 மணிநேர உழைப்புக்குப்பின் இந்த தம்பதியினர் தயார் செய்துள்ளனர்.

மேலும் தாங்கள் பலூன்கள் மூலம் இதுபோன்ற உலக வடிவமைப்புகளை செய்யும் முறை குறித்து ஒரு புத்தகத்தையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் பயணித்துள்ள ஜெரெமி ‘டாச்ஹண்ட்’ வகை நாயை 9 ஆயிரம் பலூன்களைக்கொண்டு வடிவமைத்தமைக்காக ஏற்கனவே கின்னஸ் சாதனை படைத்துள்ளார். கல்லூரி காலத்தில் அறிமுகமாகி தற்போது இவரது மனைவியாகவும், நான்கு குழந்தைகளுக்கு தாயாகவும் உள்ள கிறிஸ்டினும் இவருடைய சாதனைக்கு பெரும் உறுதுணையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கிறிஸ்டினின் அண்ணன்தான் ஜெரெமிக்கு பலூன் மூலம் நாய் பொம்மைச் செய்ய முதன்முதலில் கற்றுத்தந்தார்.

அதிலிருந்து, இதையே தொழிலாக்கிக் கொண்டு, நான்கு முதல் ஆறு அடி உயரத்தில் விலங்குகளின் வடிவங்களைத் தயார் செய்யத் தொடங்கினார் ஜெரெமி. பிரபல ஹாலிவுட் படமான ஹாபிட் வீட்டின் உட்புறம், டி-ரெக்ஸ் டைனோசர், பாபிலோனின் தொங்கும் தோட்டம் என ஏகப்பட்ட வடிவங்களை இவர் இதுவரை உருவாக்கியுள்ளார்.

அடுத்து, பிரிட்டனின் பிரபல டி.வி. தொடர் ‘டாக்டர் ஹூ’-வில் வரும் பல்வேறு காலகட்டங்களுக்கு அழைத்துச் செல்லும் டார்டிஸ்-ன் உட்புறத்தை வடிவமைக்க விரும்பும் ஜெரெமி, ஏற்கனவே அதன் வெளிப்புறத்தை வடிவமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply