தாழம்பூ இரண்டு, நல்லெண்ணெய் அரை லிட்டர் எடுத்துக்கொண்டு தாழம்பூ இதழ்களை பிரித்து எடுத்து ‘ ஈசல் இறகு போல (சிறு சிறு துண்டுகளாக) கத்திரியினால் கத்திரித்துக் கொள்ளவும்.
இதை வாயகன்ற ஓரு பாத்திரத்தில் போட்டு தேவையான எள் எண்ணையை விட்டு கடுமையான வெய்யிலில் ஓரு வாரம்வரை வெய்யிலில் வைக்கவும்.
பிறகு வடிகட்டி ஓரு புட்டியில் அடைக்கவும். இந்த எண்ணையை உடல் முழுவதும் பூசி ஒரு மணி நேரம் ஊற விட்டு சீயக்காய்த்தூள் அல்லது அரப்புத்தூள் தேய்த்து இளம் சூடான வெந்நீரில் குளிக்கவும்.
இதனால் உடலில் அருவருப்பாக தெரியும் தேமல் படை சொரி சிரங்கு, பருக்கள். முகத்தின் அழகையும் உடலின் அழகையும் கெடுத்துக் கொண்டிருக்கும் நாட்பட்ட பல்வேறு சரும நோய்கள் தீரும்.
தாழம்பூச் செடியின் வேரை நறுக்கிப் போட்டு நீர்வீட்டு காய்ச்சி வடிகட்டிய கஷாயத்துடன் சீனீ சேர்த்துக் குடிக்கவும் மேலும் துரிதகுணம் ஏற்படும்.