பாகிஸ்தானில் ஃபேஷன் தாடிக்கு தடை

பாகிஸ்தானில் ஃபேஷன் தாடிக்கு தடை

பாகிஸ்தானின் ஒரு பகுதியான பக்துன்கவா மாகாணம் ஒருசில ஆண்டுகளுக்கு முன் தலிபான்களின் பிடியில் இருந்தது. அப்போது பே‌ஷன்’ ஆக தாடி வளர்க்கவும் அதை முடிதிருத்தும் தொழிலாளர்கள் வெட்டி சீரமைக்கவும் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால் தலிபான்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ள நிலையிலும் மீண்டும் இதே தடை தற்போது விதிக்கப்பட்டுள்ளது.

இதன்படி பக்துன்கவா மாகாணத்தில் தாடியை பே‌ஷன் ஆக வெட்ட முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து முடிதிருத்தும் தொழிலாளர் சங்க தலைவர் ‌ஷரீப் காலு கூறியபோது, ‘பயங்கரவாதிகள் மிரட்டலால் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை. பலவித ‘பே‌ஷன்’களில் தாடி வளர்ப்பது இஸ்லாமிய சட்டத்துக்கு எதிரானது என்பதால் தான் இத்தகைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. என்றார்.

பக்துன் கவா மாகாணத்தில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட முடிதிருத்தும் தொழிலாளர்கள் எங்கள் சங்கத்தில் உறுப்பினராக உள்ளனர். அவர்கள் இந்த தீர்மானத்தை ஏற்றுக் கொண்டனர். தங்கள் சலூன்களில் ‘பே‌ஷன்’ ஆக தாடி வெட்ட மாட்டோம் என நோட்டீசு ஒட்டியுள்ளனர் என்றும் அவர் கூறினார்

Leave a Reply