நடிகர் ஜெயப்பிரகாஷுக்கு திடீர் தடை. லட்சுமி ராமகிருஷ்ணன் காரணமா?

பிரபல குணசித்திர நடிகரும் தயாரிப்பாளருமான ஜெயப்பிரகாசுக்கு தயாரிப்பாளர் சங்கம் திடீர் தடை விதிக்கவுள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ban-on-jayaprakash-700x512தயாரிப்பாளர் ஞானவேல் மற்றும் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் இணைந்து ஏராளமான திரைப்படங்களை தயாரித்துள்ளனர். பின்னர் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஜெயப்பிரகாஷ் தயாரிப்பு தொழிலில் இருந்து விலகினார். பின்னர் வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.பசங்க, எதிர்நீச்சல், மங்காத்தா, சென்னையில் ஓர் நாள் போன்ற திரைப்படங்களில் அவர் மிகச்சிறப்பாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து விலகும்போது ஞானவேலுக்கு ரூ.1.25 கோடி மதிப்பிலான செக் ஒன்றை கொடுத்துவிட்டு வெளியேறியுள்ளார். அந்த செக் அவரது கணக்கில் போதுமான பணம் இல்லாததால், திரும்பி வந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த ஞானவேல் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்தார்.

புகாரின் அடிப்படையில் ஜெயப்பிரகாஷ் மீது நடவடிக்கை எடுத்த தயாரிப்பாளர்கள் சங்கம் ஜெயப்பிரகாஷுக்கு சினிமாவில் நடிக்க, தடை விதிக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவர் ரூ.1.25 கோடியை ஞானவேலுக்கு திருப்பித்தரும்வரை இந்த தடையை தொடரலாம் என தயாரிப்பாளர் சங்கத்தின் முக்கிய நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் குடும்பத்திற்கு அதிகப்படியான பணத்தை செலவழித்ததால்தான் ஜெயப்பிரகாஷுக்கு பண நெருக்கடி வந்ததாக கோலிவுட்டில் கூறப்படுகிறது.

Leave a Reply