ஐபிஎல் கிரிக்கெட்: விராத் கோஹ்லி-டிவில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட்: விராத் கோஹ்லி-டிவில்லியர்ஸ் அதிரடியால் பெங்களூர் அபார வெற்றி

Royal Challengers Bangalore captain Virat Kohli congratulates Yuzvendra Chahal of Royal Challengers Bangalore for getting Deepak Hooda of Sunrisers Hyderabad wicket during match 4 of the Vivo IPL (Indian Premier League) 2016 between the Royal Challengers Bangalore and the Sunrisers Hyderabad held at The M. Chinnaswamy Stadium in Bangalore, India,  on the 12th April 2016 Photo by Shaun Roy / IPL/ SPORTZPICS

நேற்று பெங்களூர் சின்னச்சாமி மைதானத்தில் நடைபெற்ற ஐ.பி.எல்.தொடரின் நான்காவது போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் அணிகள் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியை தோற்கடித்தது.

டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி, முதலில் பந்துவீச முடிவு செய்தது. இதனால் முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்ச் பெங்களூர் அணி, இரண்டாவது ஓவரிலேயே கெய்லே விக்கெட்டை இழந்தாலும் விராத் கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் ஆகியோர்களின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் 227 ரன்கள் எடுத்தனர். விராத் கோஹ்லி 75 ரன்களும் டிவில்லியர்ஸ் 82 ரன்களும் எடுத்தனர்.

228 ரன்கள் எடுத்தால் வெற்றி என்றா இமாலய இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 182 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால் 45 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த அணியில் வார்னர் மட்டுமே ஓரளவுக்கு நிலைத்து ஆடி 58 ரன்கள் எடுத்தார்.

டிவில்லியர்ஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று கொல்கத்தா மற்றும் மும்பை அணிகள் மோதுகின்றன.

Leave a Reply