அதிர்ச்சியில் பொதுமக்கள்
வெளிமாநில தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததை அடுத்து பெங்களூரு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்கியது
இந்த சிறப்புப் பேருந்துகளில் இடம்பிடிக்க முண்டியடித்துக் கொண்டு பயணிகள் ஏறினர். பேருந்து கிளம்பும் போது டிக்கெட் எடுக்கும் போது தான் அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது
பேருந்து கட்டணங்கள் மூன்று மடங்கு அதிகமாக இருந்ததை கேட்டு பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்
சமூக இடைவெளியை பின்பற்றி 60 பேர் பயணம் செய்ய வேண்டிய பேருந்தில் 30 பேர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதால் மூன்று மடங்கு கட்டணம் வசூலிப்பதாக பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள் கூறியதாக தெரிகிறது.
இருப்பினும் கடந்த இரண்டு மாதங்களாக வேலையில்லாமல் இருக்கும் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊரை நோக்கி செல்லும் நிலையில் எவ்வாறு மூன்று மடங்கு கட்டணத்தை செலுத்துவது என புலம்பிக்கொண்டே கொடுத்ததாக தெரிகிறது