நித்தியானந்தாவின் ஆண்மை பரிசோதனைக்கு திடீர் தடை. பெங்களூர் நீதிமன்றம் உத்தரவு.

nithiநித்தியானந்தாவுக்கு ஆண்மை சோதனை நடத்த பெங்களூர் நீதிமன்றம் திடீர் தடை விதித்துள்ளது.

நடிகை ரஞ்சிதாவுடன் சர்ச்சைக்குரிய வீடியோவில் சிக்கிய நித்தியானந்தா, பெங்களூரில் ஆசிரமம் நடத்தி வருகிறார். இவருடைய ஆசிரமத்தில் பெண்கள் உள்பட ஏராளமானோர் தங்கியுள்ளனர். இந்நிலையில் அந்த ஆசிரமத்தில் தங்கியுள்ள ஆர்த்திராவ் என்பவர் கொடுத்த பாலியல் புகார் காரணமாக நித்தியானந்தா கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளிவந்தாலும் வழக்கு விசாரணை நடந்துகொண்டு உள்ளது.

இந்நிலையில் கடந்த வாரம் ராம்நகர் கோர்ட் ஜூலை 28ஆம் தேதி நித்தியானந்தாவுக்கு ஆண்மை சோதனை செய்ய உத்தரவிட்டது. ஆனால் அன்றையை தினம் நித்தியானந்தா ஆஜராகவில்லை. எனவே ராம்நகர் நீதிமன்றம் ஆகஸ்ட் 6ஆம் தேதி நித்தியானந்தாவுக்கு ஆண்மை பரிசோதனை செய்ய கைது வாரண்ட் பிறப்பித்தது. இன்று அவர் கைது செய்யப்பட்டு ஆண்மை பரிசோதனை செய்ய இருந்த நிலையில் பெங்களூர் நீதிமன்றம் அவருடைய ஆண்மை சோதனைக்கு இடைக்கால தடை விதித்துள்ளது.

பெங்களூர் நீதிமன்றத்தில் நேற்று வாதாடிய நித்தியானந்தா வழக்கறிஞர், “கடந்த 2011ஆம் ஆண்டில் நித்தியானந்தாவுக்கு ஏற்கனவே ஆண்மை பரிசோதனை நிகழ்த்தப்பட்டுள்ளதாகவும் மீண்டும் இதற்கான தேவை இப்போது கிடையாது என்றும் வாதாடினார். அவருடைய வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, நித்யானந்தாவின் ஆண்மை பரிசோதனைக்கு இடைக்கால தடை விதித்து, விசாரணையை ஆகஸ்ட் 12ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் நித்யானந்தா வரும் 18ஆம் தேதி ராம்நகர் கோர்ட்டில் ஆஜராக வேண்டும்

Leave a Reply