பெங்களூர் -நாகர்கோவில் இடையே நாளை முதல் தினசரி ரயில் போக்குவரத்து தொடங்க இருப்பதால், தென்மாவட்ட மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ள்னர்.
பெங்களூர்- நாகர்கோவில் இடையே தினசரி ரயிலை இயக்க வேண்டும் என தென்மாவட்ட பொதுமக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ரயில்வே பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வெளியானது. அந்த திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தென்மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
நாளை காலை 11மணிக்கு மத்திய ரயில்வே அமைச்சர் மல்லிகார்ஜூனே கார்கே இந்த திட்டத்தை பானசாவடி ரயில்நிலையத்தில் கொடியசைத்து தொடங்கி வைக்க இருக்கிறார். தினமும் மாலை 5 மணிக்கு பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்தில் இருந்து கிளம்பும் இந்த எக்ஸ்பிரஸ் ரயில், சேலம், ராசிபுரம், நாமக்கல், கரூர், மதுரை, விருதுநகர், நெல்லை வழியாக மறுநாள் காலை 10.20 மணிக்கு நாகர்கோவில் ரயில்நிலையத்தை சென்றடையும்.