பெங்களூர் அணிக்கு மீண்டும் ஒரு படுதோல்வி! அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வாய்ப்பு உண்டா?
இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் இருந்தே பெங்களூர் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா போலவே அவரது அணியும் ஆரம்பம் முதலே தத்தளித்து வருகிறது. இதுவரை விளையாடிய 9 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ள பெங்களூர் அணி இன்றைய 10வது போட்டியிலும் படுதோல்வி அடைந்தது.
முதலில் பேட்டிங் செய்த புனே அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 158 ரன்கள் தேவை என்ற நிலையில் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து வெறும் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் புனே அணி 61 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. விராத் கோஹ்லியை தவிர எந்த பேட்ஸ்மேனும் ஒற்றை இலக்க எண்ணை தாண்டவில்லை.