ஆதார் தகவல்களை திருட ஐந்து செயலிகளை உருவாக்கிய சாப்ட்வேர் எஞ்சினியர்
ஆதார் அட்டை இந்திய குடிமகன்களுக்கு பயன்படுகிறதோ இல்லையோ, சட்டவிரோதமானவர்களுக்கும், ரிலையன்ஸ் போன்ற பெரிய நிறுவனங்களுக்கும் பெரிய அளவில் பயன் கொடுத்து வருகிறது. ஒருசில ரியல் எஸ்டேட் அதிபர்கள் ஆதார் தகவல்களை திரட்டி தங்கள் வியாபாரத்திற்கு பயன்படுத்தி கொள்வதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் சட்டவிரோதமான முறையில் ஆதார் தகவல்களை திருடிய ஓலா கால் டாக்ஸி நிறுவனத்தின் மென்பொருள் வல்லுநர் ஒருவரை பெங்களூரு போலீஸார் கைது செய்துள்ளனர். அபினவ் ஸ்ரீவத்ஸவ் என்ற இந்த நபர் இதுவரை ஐந்து செயலிகளை உருவாக்கி அதன் மூலம் சட்டவிரோதமாக ஆதார் தகவல்களை திருடியதாக ஆதார் அமைப்பு கடந்த வாரம் பெங்களூரு காவல்துறையிடம் புகார் அளித்திருந்தது. அதன் அடிப்படையில் 6 தனிப்படை அமைக்கப்பட்டு அபினவ் ஸ்ரீவத்ஸவ்வை கைது செய்துள்ளது
தேசிய தகவல் மையத்தின் சர்வரை ஹேக் செய்து தனது செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் ஸ்ரீவத்ஸவ் பதிவு செய்திருப்பதாகவும், இதன் மூலம் இவர் பல ஆயிரங்கள் சட்டவிரோதமாக சம்பாதித்துள்ளதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.