பெங்களுர் பார்க் ஒன்றில் தன்னிடம் தவறாக நடக்க முயன்ற இளைஞன் ஒருவரை தைரியத்துடன் தாக்கிய இளம்பெண் குறித்த வீடியோ ஒன்று ஃபேஸ்புக் இணையதளத்தை கலக்கிக்கொண்டு இருக்கின்றது.
நேற்று மாலை பெங்களூர் உள்ள பிரபலமான பார்க் ஒன்றில் தோழி ஒருவருடன் வந்திருந்த இளம்பெண்ணை ஒரு இளைஞர் ஈவ் டீஸிங் செய்துள்ளார். இதனால் இளம்பெண் ஆத்திரமடைந்து அந்த இளைஞரை விரட்டி விரட்டி அடித்துள்ளார். ஒரு கட்டட்த்தில் அந்த வாலிபரை ரோட்டில் முழங்கால்போட்டு உட்கார வைத்து காலால் மிதித்துள்ளார். பின்னர் அந்த இளைஞர் அந்த பெண்ணிடம் இருந்து தப்பித்து ஓடிவிட்டார்.
இந்த காட்சியை அவரது தோழி தனது மொபைல் போனில் வீடியோ எடுத்து ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார். தனியாக செல்லும் இளம்பெண்களை ஈவ் டீஸிங் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக இருக்கவேண்டும் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
இதுகுறித்து காவல்நிலையத்தில் புகார் செய்துள்ளதாகவும், காவல்துறையினர் ஒத்துழைப்பு கொடுத்து அந்த இளைஞரை கைது செய்ய உதவி செய்வதாக கூறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
[embedplusvideo height=”400″ width=”600″ editlink=”http://bit.ly/1kvHT2o” standard=”http://www.youtube.com/v/5B0Z2Qo-E0c?fs=1″ vars=”ytid=5B0Z2Qo-E0c&width=600&height=400&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep3691″ /]