ஐ.பி.எல் 7 போட்டிகளில் நேற்று நடந்த பெங்களூர் மற்றும் கொல்கத்தா இடையிலான விறுவிறுப்பான போட்டியில் கொல்கத்தா அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டாஸ் வென்று முதலில் பீல்டிங் செய்த பெங்களூர் அணி, கொல்கத்தாவை பேட்டிங் செய்ய பணித்தது. கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 150 ரன்கள் மட்டுமே எடுத்தனர். கேப்டன் கம்பீர் ரன் எதுவும் அவுட் ஆனாலும் கல்லீஸ் நிலைத்து நின்று விளையாடி 43 ரன்கள் எடுத்தனர். பின்னர் லீன் எடுத்த 45 ரன்களால் கொல்கத்தா 150 ரன்கள் எடுத்தது.
வெற்றி பெறா 151 ரன்கள் தேவை என்ற நிலையில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி,20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. விராத் கோஹ்லி 31 ரன்களும், யுவராஜ் சிங் 31 ரன்களும் எடுத்தனர். கடைசி ஓவரில் வெற்றி பெற 9 ரன்கள் தேவை என்ற நிலையில் மோர்கல் மற்றும் ஸ்டார்க் இணைந்து 6 ரன்கள் மட்டுமே எடுத்ததால் பெங்களூர் அணி தோல்வி அடைந்தது. லீன் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.