கெய்ல்-கோஹ்லி விஸ்வரூபம். 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி

கெய்ல்-கோஹ்லி விஸ்வரூபம். 21 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக கட்டத்தை எட்டியுள்ள நிலையில் நேற்று பெங்களூர் மற்றும் குஜராத் அணிகள் மோதியது இந்த போட்டியில் பெங்களூர் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி அபாரமாக விளையாடி 20 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 213 ரன்கள் குவித்தது.

214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய குஜராத் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 192 ரன்கள் மட்டுமே எடுத்து 21 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

மிக அபாரமாக விளையாடி 38 பந்துகளில் 77 ரன்கள் குவித்த பெங்களூர் அணியின் கெய்லே ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்

Leave a Reply