ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர்: 82 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அபார வெற்றி
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி தொடரின் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணியை பெங்களூர் அணி டக்வொர்த்-லீவீஸ் முறையின்படி 82 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
டாஸ் வென்ர பஞ்சாப் அணி முதலில் பெங்களூர் அணியை பேட்டிங் செய்ய கேட்டுக்கொண்டது. முதலில் களமிறங்கிய பெங்களூர் அணி தொடக்க ஆட்டக்காரர்களான கெய்லே மற்றும் விராத் கோஹ்லியின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்களில் 211 ரன்கள் குவித்தது. விராட் கோஹ்லி 113 ரன்களும் கெய்லே 73 ரன்களும் எடுத்தனர்.
121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. ஆனால் திடீரென மழை குறுக்கிட்டதால் பஞ்சாப் அணி 14 ஓவர்களில் 202 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு டக்வொர்த் லீவீஸ் முறைப்படி அறிவிக்கப்பட்டது. ஆனால் பஞ்சாப் 14 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 120 ரன்கள் மட்டுமே பஞ்சாப் எடுத்ததால் 82 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.இந்த வெற்றியின் மூலம் பெங்களூர் அணி இரண்டாவது இடம் பெற்று அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. முதலிடத்தில் ஐதராபாத் அணியும், கொல்கத்தா, மும்பை மற்றும் குஜராத் அணிகள் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது.