ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி 20 ஓவர் போட்டியாக மாற்றம்.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நான்கு நாடுகள் இணைந்து விளையாடும் ‘ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 2016ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி முதல் மார்ச் மாதம் 6ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. வரும் ஆண்டு இந்த போட்டியை வங்கதேசம் நடத்தவுள்ளது. சிங்கப்பூரில் இன்று நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி வங்கதேசத்தில் மூன்றாவது முறையாக நடைபெறுகிறது. ஏர்கனவே 2012 மற்றும் 2014ஆம் ஆண்டுகளில் வங்கதேசம் இந்த போட்டியை நடத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இதுவரை இந்த போட்டி 50 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட்டு வந்த நிலையில் முதல்முறையாக இவ்வருடம் இந்த போட்டி 20ஓவர்கள் போட்டியாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 11ஆம் தேதி 20 ஓவர் உலககோப்பை போட்டி இந்தியாவில் தொடங்கவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.