வங்க தேச நாட்டில் மொபைல் போன்களில் ரிங் டோனாக வங்கதேச தேசிய கீதத்தை பயன்படுத்தப்படக் கூடாது என முந்தைய நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு ஒன்றை, அந்நாட்டு உச்சநீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது. இதனால் வங்கதேசம் முழுவதும் மொபைல் போனில் தேசிய கீதத்தை ரிங் டோனாக யாரும் இனிமேல் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
வங்கதேசத்தில் மொபைல் போன்களில் ரிங் டோனாக அந்நாட்டு தேசிய கீதத்தை பலர் பயன்படுத்தி வந்த நிலையில் தேசிய கீதத்தை ரிங்டோனாக பயன்படுத்த கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் ரிங் டோனை பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்தது.
ஆனால் இந்த பாடலை ரிங் டோனாக பயன்படுத்த அனுமதி கோரி மொபைல் தொலைபேசி நிறுவனங்கள் மேல் முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தன. இந்த மனுக்களை விசாரணை செய்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் நேற்று அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தது.
வங்கதேச தேசிய கீதத்தை இந்தியாவின் தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூர்தான் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.