வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

வங்கதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவை கைது செய்ய நீதிமன்றம் அதிரடி உத்தரவு

bangladesh pmவங்கதேச முன்னாள் பிரதமரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான கலிதா ஜியா அவர்களை கைது செய்ய அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2015ஆம் ஆண்டில் கலிதா ஜியாவின் வங்காளதேச தேசியவாத கட்சி ஆட்சிக்கு எதிராக தீவிர போராட்ம் ஒன்றில் ஈடுபட்டது. இந்த போராட்டத்தில் திடீரென வன்முறை வெடித்து ஜத்ரபாரி என்ற பகுதியில் பயணிகள் பேருந்து ஒன்றுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 29 பேர் காயமடைந்தனர். இதுகுறித்து கலிதா ஜியா மற்றும் அவரது ஆதரவாளர்கள் உள்பட 38 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

பின்னர் தலைநகர் டாக்காவின் பெருநகர செசன்ஸ் நீதிமன்றத்தில் இந்த வழக்கின் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி கம்ரூன் உசைன், இவ்வழக்கின் முக்கிய குற்றவாளியான கலிதா ஜியா உள்பட 28 பேரை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தார். மேலும், இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தி ஏப்ரல் 27-ம் தேதி அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இந்த உத்தரவு கலிதா ஜியாவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எனினும் நீதிமன்றம் விதித்த காலக்கெடுவுக்குள் அவருக்கு ஜாமின் பெற வாய்ப்பு உள்ளதாக அவரது வழக்கறிஞர்கள் கூறி வருகின்றனர்.

Leave a Reply