21 நாட்களாக பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம். வங்கதேச அரசு அறிவிப்பு

21 நாட்களாக பேஸ்புக்கிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம். வங்கதேச அரசு அறிவிப்பு
Facebook-on-Computers-e1328150460547
வங்காள தேச அரசு கடந்த 2009-ம் ஆண்டில் பேஸ்புக் சமூக வலைத்தளத்திற்கு ஏற்கனவே தடை விதித்திருந்த நிலையில் கடந்த மாதம் நவம்பர் மாதம் 18ஆம் தேதி மீண்டும் தடை விதித்தது. இந்த தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1971-ம் ஆண்டு பாகிஸ்தானுடனான போரின் போது போர்க்குற்றத்தில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஜமாத்-இ-இஸ்லாமி இயக்கத்தின் பொதுச் செயலாளர் அலி அசான் முஹமது முஜாகித் மற்றும் வங்காளதேச தேசியவாத கட்சி தலைவர் சலாவுதீன் காதர் சவுத்ரி ஆகியோருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டதை அடுத்து அரசுக்கு எதிரான போரட்டம் வெடிக்கும் என்ற காரணத்தால் ஃபேஸ்புக் கடந்த 18ஆம் தேதி முதல் தடை செய்யப்பட்டது.

21 நாட்கள் ஃபேஸ்புக் இணையதளம் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதை அடுத்து தடை நீக்கப்பட்டுள்ளதாக வங்கதேச அரசு அறிவித்துள்ளது. எனினும் பாதுகாப்பு காரணங்களுக்காக வாட்ஸ் அப், வைபர் போன்றவற்றிற்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்னும் நீக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply