சமீபத்தில் வங்கதேச நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த இந்திய அணி ஒருநாள் போட்டி தொடரை 2-1க்கு என்ற கணக்கில் இழந்தது. இந்திய வீரர்களின் சொதப்பலான ஆட்டத்திற்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் வங்கதேச பத்திரிகை ஒன்று இந்திய அணி வீரர்களுக்கு பாதி மொட்டை அடித்து ஒரு புகைப்படத்தை உருவாக்கியுள்ளது. இதனால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
வங்கதேச நாட்டில் உள்ள முன்னணி பத்திரிகையான ‘புரோதோம் ஆலோ’ என்ற வாரப்பத்திரிகை, இந்திய வீரர்களை அவமானப்படுத்தும் விதமாக சர்ச்சைக்குரிய இந்த விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. இந்த விளம்பரத்தால் அந்த பத்திரிகையின் விர்பனை பலமடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த பத்திரிகை ஒரு பெரிய பேனர் ஒன்றை தயார் செய்து அந்த பேனரில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் ரஹானே, ரோஹித் சர்மா, விராட் கோஹ்லி, ரவிந்தர் ஜடேஜா, கேப்டன் தோனி, ஷிகர் தவான் மற்றும் அஸ்வின் ஆகியோர் அரை மொட்டையடிக்கப்பட்ட தோற்றத்துடன் காணப்படுவது போன்று அமைத்துள்ளது. அதன் கீழே உள்ள வாசகத்தில் “நாங்கள் பயன்படுத்திவிட்டோம். நீங்களும் பயன்படுத்த முடியும்” என்றும் கூறப்பட்டுள்ளது.
அதோடு அந்த விளம்பர பேனரில் இந்திய அணிக்கு எதிராக பந்துவீச்சில் அசத்திய வங்கதேச முஸ்தாபிஜூர் ரஹ்மான் கத்தியுடன் உள்ளது போன்ற படமும் இடம் பெற்றுள்ளது. முஸ்தாபிஜூர் ரஹ்மான் இந்திய வீரர்களை மொட்டையடித்து விட்டார் என்பதை குறிக்கும் வகையில் இந்த பேனர் அமைந்துள்ளதால் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் கடும் ஆத்திரத்தில் உள்ளனர்.