ஸ்காட்லாந்து அணியின் 311 ரன்களை சேஸ் செய்து வெற்றி பெற்ற வங்கதேசம்.

CRICKET-WC-2015-BAN-SCOஉலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய போட்டியில் ஸ்காட்லாந்து அணியும், வங்கதேச அணியும் மோதின. இந்த போட்டியில் வங்கதேச அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பீல்டிங் செய்ய தீர்மானித்ததால், ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு ஸ்காட்லாந்து அணி 318 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கொயிட்ஜெர் 156 ரன்கள் குவித்தார்.

வெற்றி பெற 319 ரன்கள் தேவை என்ற கடின இலக்கை நோக்கி பேட்டிங் செய்த வங்கதேச அணி, 48.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 322 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வங்கதேச அணியின் தமீம் இக்பால் 95 ரன்களும், மகமுதுல்லா 62 ரன்களும், முசாபர் ரஹிம் 60 ரன்களும் எடுத்தனர்.

ஸ்காட்லாந்து அணியின் கொயிட்ஜர் ஆட்டநாயகனா தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் வங்க தேச அணி 5 புள்ளிகளுடன் ஏ பிரிவில் நான்காவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து, இலங்கை, ஆஸ்திரேலியா அணிகள் முதல் மூன்று இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply