இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இரண்டாவது நாள் மழை காரணமாக ஒரு பந்து கூட வீசாமல் ரத்து செய்யப்பட்டதை அடுத்து நேற்று மூன்றாம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் ஏற்கனவே தவான் சதமடித்திருந்த நிலையில் நேற்று முரளிவிஜய்யும் சதமடித்தார். முரளி விஜய் 272 பந்துகளில் 150 ரன்களும், தவான் 195 பந்துகளில் 173 ரன்களும் அடித்தனர். இதையடுத்து அதிரடி ஆட்டம் ஆடிய ரஹானே 98 ரன்கள் எடுத்தார். இந்திய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 462 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தது.
இதன்பின்னர் முதல் இன்னிங்ஸில் களமிறங்கிய வங்கதேச அணி சற்று முன்வரை 3 விக்கெட் இழப்பிற்கு 111 ரன்கள் எடுத்துள்ளது. இம்ருல் கேயிஸ் 59 ரன்களும், சாகிப் அல் ஹாசன் 1 ரன்னும் எடுத்து ஆடி வருகின்றனர். இன்னும் ஒருநாள் மட்டுமே ஆட்டம் இருக்கும் நிலையில் வங்கதேச அணியை பாலோ ஆன் ஆகசெய்து இரண்டாவது இன்னிங்ஸ் விக்கெட்டுக்களையும் இந்திய பவுலர்கள் வீழ்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்