தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டி. வங்கதேசம் அபாரம்
தென்னாப்பிரிக்க கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில் நேற்று முதல் டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று சிட்டகாங் நகரில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆனால் வங்கதேச அணியின் அனல்வேக பந்துவீச்சை சமாளிக்க முடியாத அந்த அணி, 83.4 ஓவர்களில் 248 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. டீபிளஸ்ஸிஸ் 48 ரன்களும், எல்கர் 47 ரன்களும், பாவுமா 54 ரன்களும் எடுத்தனர். வங்கதேச அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மான் 37ரன்கள் மட்டுமே 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
அடுத்து விளையாடி வரும் வங்கதேச அணி 66.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 178 ரன்கள் எடுத்துள்ளது. முசாபர் ரஹிம் மற்றும் சாகிப் அல் ஹசன் ஆகியோர் ஆடி வருகின்றனர். 6 விக்கெட்டுக்கள் கைவசம் உள்ள நிலையில் இன்னும் 60 ரன்கள் மட்டுமே வங்கதேச அணி பின் தங்கியுள்ளது.
இரண்டாவது நாளான இன்று காலை ஆட்டம் துவங்கிய சில நிமிடங்களில் மழை வந்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டுள்ளது.