வங்கிக்கடனை செலுத்தவில்லையா? உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் கழியும். நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

வங்கிக்கடனை செலுத்தவில்லையா? உங்கள் அக்கவுண்டில் இருந்து பணம் கழியும். நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

courtவிஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்கள் ஆயிரக்கணக்கான கோடிகள் கடனை வாங்கிவிட்டு கட்டாமல் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதால் வங்கிகள் அனைத்துமே வராக்கடனை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் மதுரையில் உள்ள ஒருவர் வங்கியில் வாங்கிய செலுத்தாமல் இருந்தார். அவருடைய வங்கி அக்கவுண்டில் இருந்து வங்கி கடனுக்காக தொகையை எடுத்து கொண்டது. இதுகுறித்து அந்த நபர் நீதிமன்றம் சென்றும் அவருக்கு வெற்றி கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2012ஆம் ஆண்டு தமிழ்நாடு மின்வாரியத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியரும், அவரின் மகனும் இணைந்து ரூ.75,000ஐ விவசாய கடனாக, பொதுத்துறை வங்கி ஒன்றில் பெற்றனர். அந்த கடனை 2 ஆண்டுகள் சலுகை காலம் முடிந்து, 2015, ஏப்ரல் மாதத்திலிருந்து 10 தவணைகளாகத் திரும்ப செலுத்த வேண்டும். ஆனால், கடனை வாங்கிய மின்வாரிய ஊழியரும், அவரின் மகனும் செலுத்தவில்லை. இதற்கிடையே மின் வாரிய ஊழியரின் பென்சன் தொகை வங்கியில் கிரெடிட் ஆனதும் வங்கி அதை கடனுக்கு ஈடாக எடுத்துக் கொண்டது.

இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை, ”வங்கியின் பல நினைவூட்டலுக்கு பிறகும் கடனை செலுத்தவில்லை எனில், கடன் வாங்கியவரின் வங்கி கணக்கிலிருந்து கடன் தொகையை எடுக்கலாம்” என தீர்ப்பு வழங்கியுள்ளது. அதனுடன், விதிமுறைகளுக்கு உட்பட்டு வங்கி பிடித்த கடன் தொகையை திரும்ப பெறலாம் எனவும், அவ்வாறு வாங்கும் பட்சத்தில், மனுதாரர் வாங்கிய கடனை அவரும், அவரின் மகனும் திரும்ப செலுத்த வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply