மரம் விழுந்ததில் வங்கி பெண் மேலாளர் பலி!!

சென்னை போரூர் மங்கலம் நகரில் வசித்து வந்தவர் வாணி கபிலன் வயது 57. இவர் கே.கே நகர் லட்சுமணசாமி சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கியில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில் வங்கிப்பணி முடிந்து நேற்று மாலை வாணிகபிலன் தனது காரின் பின் பக்க இருக்கையில் தனது தங்கையுடன் அமர்ந்திருந்தார்.

அங்கிருந்த மரம் ஒன்று திடீரென்று வேரோடு சாய்ந்து காரின் பின்பக்கத்தில் பலமாக விழுந்தது.

இதில் காரின் பின் பக்கத்தில் அமர்ந்திருந்த வாணிகபிலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.