3 லட்சம் பேர் பிளே ஸ்டோரில் டவுன்லோடு செய்த திருட்டு செயலி!

வங்கி விவரங்களைத் திருடும் செயலிகளை கூகுள் பிளே ஸ்டோரில் 3 லட்சம் பேர் டவுன்லோட் செய்துள்ளதாக ஆய்வு ஒன்றைல் தெரிய வந்துள்ளது.

வங்கி விவரங்களை திருடக்கூடிய செயலிகள் கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து 3 லட்சம் முறை டவுன்லோட் செய்யப்பட்டு உள்ளதாகவும் இந்த செயலிகளை பயன்படுத்தி ஆன்லைன் வங்கி தகவல்களை திருடுவதாகவும் ஆய்வு முடிவில் தெரிய வந்துள்ளது.

மேலும் மக்களின் தொலைபேசி உரையாடல் ஆகியவற்றை பதிவு செய்வதும், மொபைல் போனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வங்கி விவரங்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.