தமிழகம் உள்பட 6 தென் மாநிலங்களில் வங்கி ஊழியர்கள் இன்று ஸ்டிரைக்.

bank strikesதமிழகம் உள்பட 6 தென்மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வங்கி பயனாளிகள் பெருமளவில் பாதிக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கபடுகிறது.

வங்கி ஊழியர் சங்கங்கள் தரப்பில் இருந்து 23 சதவிகித சம்பள உயர்வு வலியுறுத்திய நிலையில், மத்திய அரசு வெறூம் 11 சதவிகிதம் மட்டுமே வழங்க முன் வந்துள்ளது. இதனை எதிர்த்து தமிழகம், கர்நாடகம், கேரளம், தெலுங்கானா, ஆந்திரபிரதேசம் மற்றும் புதுச்சேரி ஆகிய ஆறு தென் மாநிலங்களில் இன்று வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்..

இந்த வேலை நிறுத்தத்தில் 23 ஆயிரம் வங்கிக் கிளைகளில் பணியாற்றும் சுமார் ஒன்றரை லட்சம் ஊழியர்கள் பங்கேற்பார்கள் என்று அகில இந்திய வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளை மற்றும் நாளை மறுநாள் வட மாநிலங்களில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட வங்கி ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply