பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம். வங்கிகளின் திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

பணப்பரிவர்த்தனைக்கு கட்டணம். வங்கிகளின் திடீர் அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

நான்கு முறைக்கு மேல் வங்கிகளில் உள்ள கணக்குகளில் பணம் எடுத்தாலோ அல்லது டெபாசிட் செய்தாலோ, அதேபோல் நான்கு முறைக்கு மேல் ஏடிஎம்-ல் பணம் எடுத்தாலோ பணப்பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படும் என்று வங்கிகள் அறிவித்துள்ளன. இந்த கட்டணம் ரூ.150 முதல் ரூ.5000 வரை இருக்கும் என்பதால் வங்கி வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

சேமிப்பு மற்றும் சம்பள வங்கி கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்கள் தங்களது கணக்கில் ஒரு மாதத்திற்கு 4 முறை மட்டுமே ரொக்கமாக டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு மேல் டெபாசிட் செய்தால் பணப்பரிவர்த்தனை கட்டணம் பிடித்தம் செய்யப்படும். அதே போல் நான்கு முறை மட்டுமே ரொக்கமாக ஏ.டி.எம் மூலம் பணம் எடுக்கலாம். அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் ரொக்க பரிவர்த்தனைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என ICICI, AXIZ, HDFC உள்ளிட்ட வங்கிகள் அறிவித்துள்ளன.

நாடு முழுவதும் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்கப்படுத்தவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக வங்கிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பணப்பரிவர்த்தனையை கட்டுப்படுத்தும் தனியார் வங்கிகளின் இந்த அறிவிப்பால் வாடிக்கையாளர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். டிஜிட்டல் குறித்த முழு விழிப்புணர்ச்சியையும், அதற்கான வசதியையும் நாட்டு மக்களிடையே ஏற்படுத்தாமல் டிஜிட்டல் பரிவர்த்தனையை திணிக்கும் இந்த போக்கு கண்டிக்கத்தக்கது என்று வாடிக்கையாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply