32 லட்சம் டெபிட் கார்டுகளை வங்கிகள் திரும்ப பெற்றது ஏன்? பரபரப்பு தகவல்
வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள 32 லட்சம் டெபிட் கார்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளதால் வாடிக்கையாளர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சீனாவில் உள்ள ஹேக்கர்கள் வங்கி வாடிக்கையாளர்களின் பாஸ்வேர்டை திருடியிருக்கலாம் என்ற சந்தேகத்தை அடுத்து இந்த நடவடிக்கையில் இறங்கியுள்ளதாகவும், பெரும்பாலான வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு புதிய டெபிட் கார்டுகள் தந்து கொண்டிருப்பதாகவும், ஒருசில வங்கிகள் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளுமாறு தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது. இந்த நடவடிக்கை மத்திய அரசின் அறிவுறுத்தனலின் பேரில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 60 கோடிக்கும் அதிகமான பற்று அட்டைகள் புழக்கத்தில் இருந்தாலும் அவற்றில் 32 லட்சம் பற்று அட்டைகள் என்பது அதில் அரை சதவீதம்தான். இருப்பினும் சிறிய தவறு நடந்தாலும் மக்களுக்கு வங்கிகள் மீதுள்ள நம்பிக்கை சரிந்துவிடும் என்பதால் இந்த விஷயத்தை வங்கிகள் தீவிரமாக கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றன.