வங்கி ஊழியர்களின் வேலைநிறுத்தம் தொடங்கியது.

நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் மற்றும் வெளிநாட்டு வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் என சுமார் 10 லட்சம் பேர் இன்று முதல் இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிப்பணிகள் அடியோடு முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

2012ஆம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை நிறைவேற்றக்கோரி கடந்த 6ஆம் தேதி  இந்திய வங்கிகள் சங்கம், வங்கி ஊழியர் சங்கங்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. இதனால் வங்கி ஊழியர்கள் இன்றும் நாளையும் வேலைநிறுத்தம் செய்கின்றனர்.

ஏற்கனவே ஞாயிறு விடுமுறை என்பதால் தொடர்ந்து மூன்று நாட்கள் வங்கிகள் செயல்படாததால் பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுவார்கள் என தெரிகிறது. பெரும்பாலான ஏ.டி.எம். செண்டர்களில் இன்றுடன் பணம் காலியாகிவிடும் நிலை இருப்பதால், சென்னையில் பொதுமக்கள் ஏ.டி.எம். முன் நீண்ட வரிசையில் இன்று காலை முதல் நின்று பணம் எடுத்து வருகின்றனர்.

Leave a Reply