குதிரைவாலி – வாழைப்பூ அடை

5

தேவையானவை:

குதிரைவாலி அரிசி – 100 கிராம்,
மைசூர் பருப்பு – 30 கிராம்,
உளுத்தம்பருப்பு – 50 கிராம்,
முளைக்கட்டிய பாசிப்பயறு – 25 கிராம்,
வாழைப்பூ – முக்கால் கப்,
பெரிய வெங்காயம் – 1,
வரமிளகாய் – 5,
மல்லித்தழை – சிறிதளவு,
கறிவேப்பிலை – சிறிதளவு, 
எண்ணெய், உப்பு – தேவையான அளவு.

செய்முறை:

 • வாழைப்பூவை சுத்தம் செய்து, பொடியாக நறுக்கவும்.

• எல்லா வகைப் பயறு, பருப்பு, அரிசி வகைகளை ஒன்றாக தண்ணீரில் ஊறவைக்கவும்.

• வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கவும்.

• இஞ்சி, உப்பு, வரமிளகாயை அரைத்து, இதனுடன் ஊறவைத்த பருப்பு வகைகளையும் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.

• அரைத்த மாவில், பொடியாக நறுக்கிய வாழைப்பூ, வெங்காயம், மல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்துக் கலக்கவும்.

• தோசைக் கல்லில் எண்ணெய் தடவி அடைகளாக வார்க்கவும். மூடி போட்டு, வேகவிட்டு எடுக்கவும்.

பயன்கள்: குதிரைவாலி, முளைக்கட்டிய பயறு ஆகியவை கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். மைசூர் பருப்பு, அடை மிருதுவாக இருக்க உதவுவதோடு, புரதம் மற்றும் இரும்புச் சத்தைத் தரும். வாழைப்பூ, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியில் உள்ள நார்ச்சத்து, கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவியாக இருக்கும்.

Leave a Reply