அஜீத்துக்கு மாரடைப்பு என வதந்தி. போலீஸில் புகார் அளிக்க முடிவு
அஜித் நடித்த ‘வேதாளம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று அதிகாலை அஜீத் டப்பிங் பணியையும் முழு அளவில் முடித்துவிட்டார். இந்நிலையில் நேற்று முதல் அவர் தனது வீட்டில் முழு ஓய்வு எடுத்து வரும் நிலையில் அவரது உடல்நிலை குறித்து வதந்திகளை சில விஷமிகள் பரப்பியுள்ளதாகவும், அவ்வாறு பரப்பியவர்கள் மீது போலீஸில் புகார் அளிக்க முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
பல வருடங்களாக அஜித்தின் மேனேஜராக இருப்பவர் சுரேஷ் சந்திரா. நேற்று மாலை இவருடைய ட்விட்டர் தளத்தை SCREENSHOT எடுத்த மர்ம நபர்கள் போட்டோ ஷாப் மூலமாக மாற்றி “அஜித்துக்கு மாரடைப்பு என்றும் அவருக்காக பிராத்தனை செய்யுங்கள் என்றும் வாட்ஸ்-அப் மூலமாக வதந்தியை பரப்பியுள்ளனர்.
இந்த வதந்தி ஃபேஸ்புக், டுவிட்டர் உள்பட அனைத்து சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அஜீத்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா, “அஜித்தின் உடல்நிலை குறித்து சில தீய எண்ணம் படைத்தவர்கள் வதந்திகளை பரப்பி வருகிறார்கள். அவர் நலமாகவும் ஆரோக்கியத்துடனும் இருக்கிறார்” என்று தெரிவித்தார்.
மேலும், இந்த வதந்தி பரப்பியவர்கள் மீது போலீஸார் புகார் அளிக்கவும் முடிவு செய்திருக்கிறார்கள்.
English Summary: baseless rumours on Mr Ajiths health floated by ugly minnds . Sir is healthy and fine said Ajith’s manager Suresh Chandra