பேஸ்கட்பால் விளையாட்டை வேடிக்கை பார்த்த கோல்ப் வீரர் மனைவிக்கு வந்த பேராபத்து.
[carousel ids=”78851,78852,78853,78854,78855,78856″]
அமெரிக்காவில் பேஸ்கட்பால் விளையாட்டை வேடிக்கை பார்த்த பிரபல கோல்ப் வீரரின் மனைவி மீது பேஸ்கட் வீரர் ஒருவர் விழுந்துவிட்டதால் அவருடைய கழுத்தில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அமெரிக்காவில் உள்ள ஒக்லஹாமா என்ற நகரில் நடைபெற்ற பேஸ்கட்பால் போட்டியை பார்க்க பிரபல ஆஸ்திரேலிய கோல்ப் வீரர் Jason Day அவர்களின் மனைவி Ellie Day என்பவர் வந்திருந்தார். இந்நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இந்த போட்டியில் விளையாடிய வீரர், LeBron James என்பவர் பந்தை தடுப்பதற்காக முயன்ற போது நிலைதடுமாறி Ellie Day மீது எதிர்பாராமல் விழுந்துவிட்டார்.
இதனால் Ellie Day அவர்களின் கழுத்தில் காயமேற்பட்டது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருடைய உடல்நிலை குறித்த தகவல்கள் வெளிவரவில்லை.
இதுகுறித்து பேஸ்கட்பால் வீரர் LeBron James தனது வருத்தத்தை டுவிட்டரில் தெரிவித்துள்ளார். “Ellie Day அவர்கள் குணமாகிய பின்னர் மீண்டும் நான் விளையாடும் ஆட்டத்தை பார்க்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
English Summary: This is the shocking moment Australian golfer Jason Day’s wife was wiped out by basketball star LeBron James as she watched a game – before she was stretchered away in a neck brace.
https://www.youtube.com/watch?time_continue=59&v=8iA5i1mSMeM