* ஒருவகை உப்புதான் சோப்பின் மூலப்பொருள். அதில் காரத்தன்மை பொருந்திய ஆல்கலைனையும், தாவர கொழுப்புகளையும் சரியான விகிதத்தில் சேர்க்கும்போது குளியல் சோப் தயாராகிறது. நிறத்திற்கான பொருளும், வாசத்திற்கான பொருளும் அதில் சேர்க்கப்படுகிறது.
* உங்கள் சருமத்திற்கு ஏற்ற, சோப்பை தேர்வு செய்யவேண்டும். அதாவது சருமத்திற்கு ஏற்ற காரத்தன்மையும், அமிலத்தன்மையும் அதில் இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய வேண்டும்.
* கார, அமிலத்தன்மையை குறிக்கும் அளவீடு ‘ஜீலீ 5.5’ என்ற கணக்கில் இருக்க வேண்டும்.
* அவ்வாறு அமையாவிட்டால் சருமத்தின் ‘ஜீலீ’ அளவில் மாற்றம் ஏற்படும். அதனால் தோல் வறட்சி, அரிப்பு, எரிச்சல் போன்ற சரும பிரச்சினைகள் உருவாகலாம்.
* எண்ணெய் பசை நிறைந்த சருமத்திற்கு வேப்பிலை, எலுமிச்சை கலந்த சோப் நல்லது.
* வறண்ட சருமத்திற்கு கோகோ பட்டர், வெஜிடபிள் எண்ணெய், கற்றாழை, ஜோஜோபா எண்ணெய், வைட்டமின் ‘இ’ (இயற்கை எண்ணெய்), அவகோடா ஆகியவற்றால் தயாரிக்கப்பட்ட சோப் சிறந்தது.
* சோப்பின் அழகிய நிறங்களும் குறிப்பிட்ட சில ரசாயன மூலப்பொருட்களை சார்ந்தே அமைகிறது.
* டி.எப்.எம். (ஜிஷீtணீறீ திணீttஹ் விணீttமீக்ஷீ) என்பது சோப்பின் தரத்தை குறிப்பிடுகிறது.
* முதல் தர சோப் என்பது 75 சதவீதத்திற்கு அதிகமான டி.எப்.எம் கொண்டதாகும்.
* 65 முதல் 75 சதவீதம் வரை டி.எப்.எம் இருந்தால் அது நடுத்தரமானது.
* சிலர் அறிமுகமாகும் அனைத்து சோப்புகளையும் பயன்படுத்திப்பார்ப்பார்கள். அந்த பழக்கத்தை தவிர்க்கவேண்டும்.
* 65 சதவீதத்திற்கும் குறைவான டி.எப்.எம் இருந்தால் அது தரம் குறைந்த சோப் எனப்படுகிறது. எனவே சோப் வாங்கும்போது டி.எப்.எம் அளவினை பார்த்து வாங்குங்கள்.
* வீரியம் நிறைந்த ரசாயனங்களான சோடியம் லாரில் சல்பேட், சோடியம் லாரீத் சல்பேட், சின்தடிக் ப்ராக்ரன்ஸ் ஆகியவைகளால் தயாரிக்கப்பட்ட சோப்புகளை குளியலுக்கு பயன்படுத்தக்கூடாது.
* பெரியவர்கள் சிலர் பேபி சோப் எனப்படும் குழந்தைகளுக்கான பிரத்யேக சோப்பினை பயன்படுத்துகிறார்கள். அது சரியில்லை. அதை பயன்படுத்தினால் உடலில் அழுக்குத் தங்கிவிடும்.
* சரும துளைகள் பிறந்த குழந்தைகளுக்கு இருக்காது. அதற்கு ஏற்றபடி வீரியம் குறைந்த பொருட்களை கொண்டே குழந்தைகளுக்கான சோப் தயாரிக்கப்படுகிறது.
* பெரியவர்களுக்கு சருமத்துளைகள் முழுமையடைந்து எண்ணெய் பிசுபிசுக்கும். அழுக்கும் படியும். அவற்றை நீக்கும் சக்தி பேபி சோப்பில் இல்லை. எனவே மூன்று வயதுக்கு மேல் பேபி சோப் பயன்படுத்த வேண்டாம்.
* சோப்பின் பணி அழுக்கை நீக்குவது மட்டுமே. அழகாக்குவதோ அல்லது சிவப்பழகை வழங்குவதோ அல்ல. எனவே விளம்பரங்களில் தோன்றும் நடிகைகளின் அழகைப்பார்த்து சோப் வாங்குவதை தவிர்க்கவேண்டும்.
* மூலிகை சோப் என்று சொல்லப்பட்டாலும், அதிலும் ரசாயன மூலப்பொருட்களை சேர்க்கத்தான் செய்வார்கள்.
* இயற்கை பொருட்களில் தயாராகும் சோப்புகளும் கடைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கும் போதும் ஜீலீ அளவு, டி.எப்.எம். ஆகியவற்றை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
* ஒரு நாள் ஒருமுறை மட்டுமே சோப் பயன்படுத்தி முகத்தை கழுவுங்கள். பிற நேரங்களில் சாதாரண தண்ணீரால் முகத்தை கழுவினால் போதுமானது.
* அடிக்கடி முகத்தில் சோப் போட்டால், சருமம் வறண்டுபோகும்.
* லிக்விட் என்ற சோப் வகை ஈரத்தன்மை அதிகம் கொண்டது. அதில் ரசாயனத்தின் வீரியம் குறைவு.
* சாதாரண சோப் ஒத்துக் கொள்ளாதவர்கள் மற்றும் சரும பிரச்சினை உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் சோப்பை தேர்ந்தெடுத்து பயன்படுத்த வேண்டும். சோப்பில் சேர்க்கப்படும் அதிகப்படியான கொழுப்பின் வாசத்தை குறைக்கவே நறுமண ரசாயனங்கள் சேர்க்கப்படுகிறது. எனவே நறுமணத்தினை மட்டுமே விரும்பி சோப் வாங்குவதை தவிர்த்திடவேண்டும்.
முகப்பருவை தடுப்பதாககூறி சிலர் மூலிகை சோப்பை பயன்படுத்துவார்கள். அவர்கள் பயன்படுத்தும் முன்னால் அதில் என்னென்ன மூலிகைகள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்று பார்க்கவேண்டும். அதன் விவரம் சோப் கவரில் இருக்கும். வியர்வை நாற்றத்தால் அவதிப்படுகிறவர்களுக்கு லேவண்டர், சிட்ரஸ், லெமன் கிராஸ், ரோஜா ஆகியவைகளை கலந்து தயார் செய்யும் சோப் சிறந்தது.