தெலுங்கு உள்பட மேலும் 4 இந்திய மொழிகளில் பிபிசி ஒளிபரப்பு

தெலுங்கு உள்பட மேலும் 4 இந்திய மொழிகளில் பிபிசி ஒளிபரப்பு

bbcலண்டனில் இருந்து ஒளிபரப்பாகி வரும் பிபிசி வானொலி மற்றும் தொலைக்காட்சி தற்போது 28 மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆங்கிலம், தமிழ், பெங்காலி, இந்தி,ம் ரஷ்யன்,உருது ஆகிய முக்கிய மொழிகள் இந்த 28 மொழிகளில் அடங்கும்

இந்நிலையில் பிபிசி நிறுவனம் மேலும் 14 மொழிகளில் தனது ஒளிபரப்பை விரிவுபடுத்த உள்ளது. இவற்றில் தெலுங்கு, குஜராத்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய 4 இந்திய மொழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய மொழிகளில் வானொலி மற்றும் வலைதளச் சேவைகளை வரும் 2017ஆம் ஆண்டு தொடங்க முடிவு செய்திருப்பதாக பிபிசி நிர்வாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தியப் பிராந்தியத்தில் 157 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவுள்ளதாகவும், பிரிட்டனுக்கு வெளியே பிபிசியின் மிகப்பெரிய மையமாக இந்தியா உருவெடுக்கும் என்றும் பிபிசி தெரிவித்துள்ளது.

Leave a Reply