ஐ.பி.எல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் ராமன் திடீர் ராஜினாமா

ஐ.பி.எல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் ராமன் திடீர் ராஜினாமா
ipl
ஐ.பி.எல் போட்டிகளின் சூதாட்டத்தில் தொடர்பு இருந்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஐ.பி.எல் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் ராமன், நேற்று தனது பதவியை திடீரென ராஜினாமா செய்துள்ளார். அவருடைய ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும்,
நவம்பர் 5 அன்று அவர் முறைப்படி பிசிசிஐ-யிலிருந்து விலகுவார் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சூதாட்டம் நடைபெற்றதாகப் புகார் எழுந்ததை அடுத்து தொடரப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் சூதாட்டத்தில் ஈடுபட்ட சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் 2 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த தீர்ப்பை அடுத்து ஐபிஎல் தலைமை செயல் அதிகாரி சுந்தர் ராமன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பற்றி சிறப்பு அதிகாரி விவேக் பிரியதர்ஷி விசாரணை செய்து வரும் நிலையில் சுந்தர் ராமன் திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Leave a Reply