பி.இ. படித்தால் போதும், கணித ஆசிரியர் ஆகலாம்: தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
தமிழக பள்ளிகளில் ஆசிரியராக வேண்டுமென்றால் பி.எட் அல்லது டெட் தேர்வு எழுதி இருக்க வேண்டும் என்ற விதிமுறை இதுவரை இருந்து வந்த நிலையில் தற்போது பிஇ படித்தால் போதும், கணித ஆசிரியர் ஆகலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளதால் பி.இ. பட்டதாரிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
லட்சக்கணக்கில் செலவு செய்து பி.இ. படித்த பல இளைஞர்கள் வேலையின்றி தவித்து வருவதால் பி.இ. படித்தவருக்கு தற்போது ஆசிரியர் என்ற கூடுதல் வேலை கிடைக்கும் வாய்ப்பால் அவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது
இன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின்படி படித்தவர்களும் இனி பி.இ. படித்தவர்களும் டெட் தேர்வு எழுதி 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியர் ஆகலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
பி.இ. படிப்பில் எந்த பிரிவை படித்தவர்களும் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை கணித ஆசிரியராகலாம் என தமிழக அரசு அரசாணை உண்மையில் பி.இ. படித்த இளைஞர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் ஆகும்