இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி. பரிதாபமான நிலையில் வங்கிகளின் பங்குகள்

இந்திய பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி. பரிதாபமான நிலையில் வங்கிகளின் பங்குகள்

shareஇந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து 3வது நாளாக கடுமையாக சரிவை சந்தித்து வருவதால் முதலீட்டாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.. கடந்த 2014-ம் ஆண்டு மே மாதத்துக்கு முன்பு இருந்த நிலைமைக்கு பங்குச் சந்தைகள் தற்போது வந்துள்ளது. வாராக் கடனுக்கு ஒதுக்கீடு செய்த தொகைகள் அதிகரித்து வருவதாக் பாரத ஸ்டேட் பாங்க் வங்கி உள்பட அனைத்து  வங்கிப்பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு பிரதமராக நரேந்திர மோடி பொறுப்பேற்ற சமயத்தில்  7215 புள்ளி என்ற அளவில் நிப்டி இருந்தது. ஆனால் தற்போது அதைவிட குறைவாக 7150 என்ற நிலைக்கு கீழிறங்கியுள்ளது.  அதேபோல் சென்செக்ஸ் 23500 என்ற அளவில் மிக மோசமாக இறங்கியுள்ளது.

சென்செக்ஸ் பங்குகளில் டாடா மோட்டார்ஸ், ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, அதானி போர்ட்ஸ், ஹெச்டிஎப்சி, சிப்லா ஆகிய பங்குகள் கடும் சரிவை சந்தித்தன. ஆனால் கோல் இந்தியா, எல் அண்ட் டி, மாருதி, ரிலையன்ஸ் ஆகிய பங்குகள் மிக சிறிதளவு உயர்ந்தன. நிப்டி பட்டியலில் உள்ள 50 பங்குகளில் 37 பங்குகள் சரிந்தும்13 பங்குகள் உயர்ந்தும் நேற்றைய வர்த்தகம் முடிந்தது.

சர்வதேச அளவில் சீனாவின் நிலைமை கவலைக்குரியதாக இருக்கிறது. அதேபோல பொதுத் துறை வங்கிகளின் நிலைமையே பங்குச்சந்தைகள் சரிய காரணமாகும் என்று பங்குச்சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் டிசம்பர் காலாண்டில் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இந்த நிலைமையில் எஸ்பிஐ வங்கியின் காலாண்டு முடிவுகள் இன்று வர இருப்பதால் நேற்றைய வர்த்தகத்தில் அந்த பங்கு 4 சதவீதத்துக்கு மேல் சரிந்தது.

Chennai Today News: Bearish Indian share market. Investors worried

Leave a Reply