கடைகளில் விற்கப்படும் க்ரீம்களில் தெளிவாக எந்த வகையான சருமத்தினர் பயன்படுத்த வேண்டுமென்று குறிப்பிடப்பட்டிருக்கும். ஆனால் அதை கவனிக்காமல் பயன்படுத்துவதால், அந்த க்ரீம்கள் அழகை கெடுக்கின்றன.
முதலில் உங்கள் சருமம் எந்த வகை கொண்டது என்பதை தெரிந்து கொண்டு அதன் பின்னரே க்ரீம்களை உபயோகப்படுத்த வேண்டும். இப்போது உங்களுக்கு இருப்பது எந்த வகையான சருமம் மற்றும் எந்த மாதிரியான பராமரிப்புக்களை மேற்கொள்ள வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முகத்தை கழுவிய பின்னர், சருமம் இறுக்கமடைகிறதா? மேலும் முகத்தில் ஆங்காங்கு தோலுரிந்து காணப்படுகிறதா? அப்படியெனில் உங்களுக்கு இருப்பது வறட்சியான சருமமாகும். இவர்கள் எண்ணெய் பசை நிறைந்த கிளின்சர்களைப் பயன்படுத்த வேண்டும்.
மேலும் தினமும் சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்த வேண்டும். இரவில் படுக்கும் முன் எண்ணெய் பசை நிறைந்த மாய்ஸ்சுரைசரைப் பயன்படுத்த வேண்டும். வாரம் இரண்டு முறை ஸ்கரப் செய்ய வேண்டும்.
தினமும் பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை சருமத்தில் தடவி 20 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.