பெல்ஜியம் குண்டுவெடிப்பு எதிரொலி. இந்திய விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு.

பெல்ஜியம் குண்டுவெடிப்பு எதிரொலி. இந்திய விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு.

airwaysபெல்ஜியம் நாட்டின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவற்றில் அடுத்தடுத்து தீவிரவாதிகள் நடத்திய குண்டுவெடிப்பு தாக்குதலில் 21 பேர் பரிதாபமாக பலியானதாகவும், பலர் காயம் அடைந்ததாகவும் தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் ஜெட் ஏர்வேஸ் விமான ஊழியர்கள் 3 பேர் படுகாயம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த தாக்குதலை அடுத்து டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பெல்ஜியம் தலைநகர் பிரசெல்ஸ் விமான நிலையத்தில், நேற்று பிற்பகல் தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 21 பேர் பலியானார்கள். இந்த குண்டுவெடிப்புக்கு முன்பாகவே மும்பையில் இருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம், பிரசெல்ஸ் விமான நிலையத்தில் காலை 7.11 மணிக்கும், டெல்லியில் இருந்து சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம் காலை 8 மணிக்கும் தரையிறங்கியது. குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு முன்னதாக ஜெட் ஏர்வேஸ் விமானம் சென்றதால் அங்கிருந்த ஊழியர்கள் 3 பேர் இந்த குண்டுவெடிப்பில் சிக்கி படுகாயம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இவர்கள் தவிர இந்த குண்டுவெடிப்பால் வேறு இந்தியர்கள் யாருக்கும் பாதிப்பு இல்லை என்றும் பெல்ஜியத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் பாதுகாப்புடன் இருப்பதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அறிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் உள்ள முக்கிய விமான நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டெல்லி, சென்னை, மும்பை உள்ளிட்ட முக்கிய விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

Leave a Reply