ஆட்சிக்கு வந்தால் பீகாரிலும் பசுவதை சட்டம். அமித்ஷா உறுதி
பாரதிய ஜனதா கட்சி ஆட்சி செய்யும் மாநிலங்களில் பசுவதை சட்டம் அமலுக்கு கொண்டு வந்துள்ள நிலையில், பீகார் தேர்தலில் பாஜக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் அங்கும் பசுவதை சட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக தேசிய தலைவர் அமித்ஷா கூறியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று புதுடெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அமீத்ஷா, ‘பாஜக ஆளும் மாநிலங்களில் எல்லாம் பசுவதை தடைச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. பீகார் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாய கூட்டணி வெற்றி பெற்றால் பீகாரிலும் பசுவதை தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம்.
உத்தரப் பிரதேச மாநிலம், கிரேட்டர் நொய்டாவில் உள்ள தாத்ரி பகுதியில் உள்ள ஒரு குடும்பம், பசுவதை செய்ததாக எழுந்த வதந்தியை அடுத்து, அந்தக் குடும்பத் தலைவர் இக்லாக் என்பவரை ஒரு கும்பல் அடித்துக் கொலை செய்தது.
இதுதொடர்பாக காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலுபிரசாத் எந்தக் கருத்தும் சொல்லாமல் மெளனமாக இருப்பது ஏன் என்று அமீத்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.
பசுவதை தடை சட்டம், மாட்டிறைச்சி சாப்பிடும் போராட்டம் என மாறி மாறி நாட்டின் பல பகுதிகளில் நடந்து வருவதால் இந்த பிரச்சனை விரைவில் பூதாகரமாக வெடிக்கும் என சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.