பிரேசில் நாட்டில் தற்போது உலகக்கோப்பை கால்பந்துபோட்டி விறுவிறுப்பான கட்டத்தை அடைந்துள்ளது. லீக் போட்டிகள் முடிவடைந்து இன்று முதல் நாக் அவுட் போட்டிகள் தொடங்கவுள்ளன.
இந்நிலையில் பெல்ஜியம் அணிக்கும் அமெரிக்க அணிக்கும் வரும் ஜூலை 1ஆம் தேதி நாக் அவுட் போட்டி நடைபெற உள்ளது. இந்த போட்டியில் தோல்வியுறும் அணி போட்டியில் இருந்து வெளியேறிவிடும். இந்நிலையில் பெல்ஜியம் பிரதமர் எலியோ டிருபோ இன்று தனது டுவிட்டரில் அமெரிக்காவுக்கு எதிரான நாக் அவுட் போட்டியில் பெல்ஜியம் அணி கண்டிப்பாக வெற்றி பெறும். ஒருவேளை பெல்ஜியம் தோல்வி அடைந்தால் அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு தங்கள் நாட்டின் விலையுயர்ந்த பீரை வழங்கத்தயார். அதுபோல் அமெரிக்க அணி வெற்றியடைந்தால் அமெரிக்க பீர் எனக்கு வழங்க ஒபாமா தயாரா? என்று பந்தயத்திற்கு அழைத்துள்ளார்.
இதுகுறித்து ஒபாமா இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை எனினும் பெல்ஜியம் மற்றும் அமெரிக்காவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பெல்ஜியம் பிரதமர் இந்த பேச்சுக்காகவே தங்கள் அணி வெற்றி பெறவேண்டும் என அமெரிக்க வீரர்கள் மும்முரத்துடன் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.