பெல்ஜியம்: விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் என அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்

பெல்ஜியம்: விமான நிலையம், மெட்ரோ ரயில் நிலையம் என அடுத்தடுத்து வெடிகுண்டு தாக்குதல்
belgium
பெல்ஜியம் நாட்டின் தலைநகர் புருசெல்ஸ் நகரத்தின் விமான நிலையம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து வெடிகுண்டுகள் வெடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புருசெல்ஸ் விமான நிலையத்தில் இன்று காலை திடீரென அடுத்தடுத்து இரண்டு சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள் வெடித்த சத்தம் கேட்டு விமான நிலையத்திற்கு வந்திருந்த  பயணிகள் அலறியடித்து கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே ஓடினர். விமான நிலையம் முழுவதும் தீப்பற்றி எரிந்து கரும்புகையாக காட்சி அளித்தது. விமான நிலையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் நிகழ்ந்த இந்த  குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒருவர் பலியானதாகவும் பலர் காயமடைந்ததாகவும் முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

விமான நிலையத்தில் வெடித்த வெடிகுண்டின் அதிர்ச்சியில் இருந்தே பெல்ஜியம் மக்கள் மீளாத நிலையில் விமான நிலையத்தை அடுத்து உள்ள மாயெல்பீக் மெட்ரோ ரெயில் நிலையத்திலும் சக்திவாய்ந்த குண்டு ஒன்று வெடித்தது. இதனால் அந்த பகுதியில் இருந்த அனைவரும் உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்தனர். முதலுதவி மற்றும் மீட்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றுள்ள நிலையில் மெட்ரோ ரெயில் நிலையம் பூட்டப்பட்டுள்ளதாக உள்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாரிஸ் தாக்குதல் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் சலாஹ் அப்தெல்சம் புருசெல்ஸில் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில் இந்த வெடிகுண்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply